
முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர்
காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பவில்லை. பள்ளி
சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் இல்லை.
இதுபோன்று பல கொடுமைகளை இலங்கை அரசு நடத்தி உள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை மீண்டும் குடி அமர்த்த இலங்கை அரசு
மறுத்து வருகிறது. கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடல்கள்
அங்கு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கன்னி வெடி இருப்பதாக கூறி
குடியமர்த்த மறுத்து வருகிறார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடையாது.
இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு செல்ல உள்ள குழு இலங்கை அரசு, சிங்கள
ராணுவம் கூட்டி செல்லும் இடங்களுக்கு மட்டும் செல்லக்கூடாது. கிளிநொச்சி,
முள்ளிவாய்க்கால் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment