முன்னிலை சோசலிக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டமை என்பன இல ங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.
மேற்படி இருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியல் தன்மையின் அடையாளத் வெளிப்படுத்துவதோடு ஏனைய காணாமல்போன சம்பவங்களின் பண்புகளை காட்டி நிற்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற சமயத்தில் இலங்கைக்கான ஐ.நாவின் பேச்சாளராக செயற்பட்ட கோர்டன் வொய்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் பல அப்பாவிப் பொதுமக்கள் காணாமல்போன சம்பவங்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவடைந்த பின் கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடராது என மக்கள் நினைத்தபோதும் அச் சம்பவங்களில் குறைவு இல்லை என கோர்டன் வொய்ஸ் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போதல் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது. கடத்தல் தொடர்பில் உறவினர்கள் வெளி உலகிற்கு கூறியதை அடுத்தே பிரேம்குமார் குணரட்ணம் விடுவிக்கப்பட்டதாக கோர்டன் வொய்ஸ் தெரிவித்துள்ளார்.
காப்புரிமை; வலம்புரி
No comments:
Post a Comment