Translate

Friday 13 April 2012

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.-ரணில்


இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மே மாத நாடாளுமன்ற அமர்வுகளில் கேள்வி எழுப்பப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரணில், அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் அல்.கே. அத்வாணி அகியோரை ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனும் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment