Translate

Friday 8 June 2012

கோவை வந்த இலங்கை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பின

கோவை வந்த இலங்கை அமைச்சருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பினார். கோவையில் CENTRAL GOVT CONTROLLED  -  மத்திய அரசின் வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் கரும்பு இனப்பெருக்க மையம் செயல்படுகிறது. இந்த மையத்தை நேரில் பார்வையிட்டு, அதேபோல் இலங்கையில் ஒரு மையத்தை அமைப்பதற்கு இலங்கை சிறு ஏற்றுமதி மற்றும் பயிர் உற்பத்தித்துறை அமைச்சர் ரெஜினால்டு குருவே தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


நேற்று முன்தினம் மாலை அமைச்சருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் குழுவை சேர்ந்த 3 பேர் வந்தனர். அவிநாசி ரோட்டில் நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இக்குழுவினர் வருகை உள்ளூர் போலீசாருக்குகூட தெரியவில்லை. ஆனாலும், தகவல் அறிந்த கோவை புறநகர் மாவட்ட செயலா ளர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான மதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் நேற்று காலை குவிந்தனர். 

இதேபோல் விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர் என பல்வேறு கட்சியினரும் அடுத்தடுத்து அங்கு வந்தனர். அப்போது இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதற்கிடையே, கரும்பு இனபெருக்க மையம் முன் போராட்டம் நடத்த பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோரும், சட்டக்கல்லூரி மாணவர்களும் குவிந்தனர். இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் அதிகாரிகள், அமைச்சரிடம் தொடர்பு கொண்டு, ‘பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீங்கள் மையத்திற்கு செல்வதாக இருந்தால் உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்கிறோம்‘ என்றனர். ஆனால், இலங்கை அமைச்சர் தரப்பில், அங்கு செல்ல விரும்பவில்லை என்றும், சொந்த ஊர் திரும்புவதாகவும், விமான நிலையம் வரை பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரும்படி கோரியுள்ளனர்.
அமைச்சர் மற்றும் குழுவினரை உதவி கமிஷனர் தலைமையில் சாதாரண சீருடை அணிந்த போலீசாரை கொண்டு ரகசியமாக பின்புற வாயில் வழியாக காலை 9.20க்கு அனுப்பி வைத்தனர். காலை 10.30க்கு விமானம் மூலம் இலங்கை அமைச்சர் சென்னை சென்றார். இதற்கிடையே, இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment