Translate

Friday, 8 June 2012

மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி!


இன்று வெள்ளிக் கிழமை (08-06-2012) மாலை 4.45 மணிக்கு  தமிழீழத் தேசியக் கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய பல்லினமக்கள், கரவொலி  எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.



ஒஸ்ரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதான கட்டிடங்களில் முக்கியாமாதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டடமாகும்.

கொடியேற்றலின் பின்பு, தமிழீழத் தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி டொமினிக் சந்தியாப் பிள்ளை, பல்லின மக்களின் பெருகிவரும் ஆதரவு தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள்  விவரணப்படம் திரையிடப்பட்டது. இதனைப் பார்வையிட்ட தொழிற் சங்க உறுப்பினர்கள் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்ததுடன், சிறிலங்கா  அரசின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தனர்.
காணொலி


படங்களுக்கு இங்கே செல்லவும் http://tamilleader.com/images/stories/news2012/june/melflagraising/
YouTube - Videos from this email

No comments:

Post a Comment