Translate

Sunday, 3 June 2012

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்பதை நிரூபிக்கும்


இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வகையில் தென்னிலங்கையின் திஸ்ஸமகாராம பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள்!

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமகாராம
பகுதியில் கி.மு 200 ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.


அப்பிரதேசத்தில் தொல்பொருளாராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜேர்மனிய ஆராய்ச்சியாளர் குழுவினர் இந்த எழுத்துக்களைக் கண்டு பிடித்தனர்.

இத்தொல்பொருளாய்வாளர் குழுவைச் சேர்ந்த ஐ.மகாதேவன் இந்த எழுத்துக்களைக் கண்டு பிடித்த பெருமையை பெறுகின்றார்.




தென்னாசியாவின் மிகப் பழைய மொழிகளாக பிராமியும், தமிழுமே உள்ளன ஆனால் சிங்கள மொழி 08 ஆம் 09 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் தமிழ் வர்த்தகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்கட்டி உள்ளார்கள்.

திஸ்ஸமகாராம பிரதேசம் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கதிர்காமத்துக்கு அருகில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

News Link :
எமது வரலாற்று சரித்திர சான்றுகள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்றுதடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லைஇலங்கை முழுவதும் ஆட்சி செய்து ஆண்டுவந்த எமது இனத்தை இன்று வந்தேறிகளான விஜயனின் பரம்பரை என் கூறும் சிங்களவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான மண்ணை அபகரித்தது மட்டும் அல்லாமல் தாம் சொல்வது உண்மையற்றவை என்று தெரிந்தும் எமது தாயாக மண்ணை இல்லாமல் சிங்களமயமாக்கும் வெறித்தனத்தில் எம் இனத்தை திட்டமிட்டு இனவழிப்பு செய்து வருகின்றன் பௌத்த சிங்கள தேரர்களின் துணையுடன் இலங்கையை ஆளும் இனவெறிபிடித்த மகிந்த ராயபக்ச . தனது இனத்தின் வரலாற்றை அறிந்து இருப்பது ஒவ்வொருவரின் கடமை என்னால் முடிந்த என் இதத்தின் நன்மைக்காக நான் இந்த முயச்சியை செய்து கொண்டு இருக்கின்றேன் மண்ணையும் இனத்தையும் மொழியையும் காப்பது தமிழர்களே உங்கள் கையில் உலகிலதமிழ் இனத்தின் தாயகமான மண்ணின் விடுதலையை பெற்றெடுக்க உழைப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் உறங்கினால் வரலாற்று பிழையை செய்து விடுவோம் எம் இனத்தின் வரலாறு உலக தமிழ் இனத்தின் வரலாறும் இருப்பும் வாழ்க்கையும் எமது தாய் நாட்டை மீட்டு எமது இனத்தின் பெருமையை உலகில் நிலைநாட்டுவோம் தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம

No comments:

Post a Comment