Translate

Monday, 4 June 2012

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வின்றேல் சர்வதேசத்தின் தலையீட்டுடன் பிரிவினை ஏற்படும்


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வின்றேல் சர்வதேசத்தின் தலையீட்டுடன் பிரிவினை ஏற்படும்

Vikramabahu_Karunaratne_j300_1_8
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் “” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு”அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிப்பதென்பது காலத்தை கடத்தி சர்வதேசத்தை ஏமாற்றும் செயலாகுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “”எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு” அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பிருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்,
யுத்த முடிவுக்கு பின்னர் இலங்கையில் ஸ்திரத் தன்மை உருவாகுமென்றும் அதன் போது வெளிநாடுகள் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் தெரிவித்தன. ஆனால் இன்று தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காததால் இலங்கையின் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லையென்றும் எனவே முதலீடுகளை மேற்கொள்ளும் சூழ்நிலை இல்லை யென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே பாராளுமன்ற தெரிவுக் குழுவை அழைத்து கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றது. அவ்வாறானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் புரிந்துரைகள் திஸ்ஸ விதாரண அறிக்கை மற்றும் 13 பிளஸ் அடிப்படையில் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் தயாரித்து பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்.
அதைவிடுத்து கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதென்பது காலத்தை கடத்தி சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகமாகும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை. அரசாங்கத்திற்குள் உள்ள சதிகார இனவாதக் கும்பல்களே எதிர்க்கின்றன. இவர்களே கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
எரிபொருள் விலைகள்
எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் குறைந்துள்ளது. ஆனால் இலங்கையில் விலைகள் குறைக்கப்படவில்லை. இதற்கு ரூபாவின் மதிப்பிறக்கமே காரணமென அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த வெட்கமில்லாமல்” கருத்து வெளியிடுகிறார்.
இலங்கை வரலாற்றில்
எந்தவொரு ஆட்சியாளரும் தற்போதைய அரசாங்கத்தை போன்று ஏகாதிபத்தியவாதிகளிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் மண்டியிடவில்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே ரூபா மதிப்பிறக்கப்பட்டது. மக்கள் நலன்புரிகள் நிறுத்தப்பட்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். இதற்கெதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதில் தொழிற்சங்கங்களும் இணைய வேண்டும் என்றார். __

No comments:

Post a Comment