தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கத்தில் நாளை காலை 9:00 மணியளவில் மகிந்த உரையாற்ற இருக்கின்றார். எனவே தமிழ் மக்களை அந்த இடத்தில் காலை 8:00 மணிக்கு அணிதிரள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த முறை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் மகிந்த பேச இருந்ததை, தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தியபோது, உலகத் தமிழினம் மகிழ்ச்சி அடைந்ததைச் சுட்டிக்காட்டிய சீமான், இம்முறையும் போர்க்குற்ற நபரின் பேச்சை தடுத்து நிறுத்தி தமது ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நாளைய போராட்டத்தில் தமிழ் மக்கள் 20,000 பேர் கலந்து கொண்டால், கடந்த முறை போன்று மகிந்தவின் பேச்சை இடை நிறுத்த நேரிடும் என, பிரித்தானிய காவல்துறையினர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரிடம் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment