போர்க்குற்றவாளியான மஹிந்தவுடன் மகாராணி விருந்தில் பங்கேற்பது ஏன்? மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேள்வி
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ஷவுடன் ஏன் மதிய உணவில் பங்கேற்க வேண்டும் என பிரித்தானிய மகாராணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென் ரோத் .
தனது ருவிற்றர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தநிலை யில், ஜனாதிபதியின் பிரிட்டன் பயணத்துக்கு எதிரான போராட்டங்கள் லண்டனில் தீவிரமடைந்துள்ளன.
ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்றுமுன் தினம் இரவும் பெருமளவில் தமிழர்கள் திரண்டு நின்று மகிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதே வேளை அவர் நாளை மாலை 7 மணியளவில் லண்டனில் உள்ள மன்சன் ஹவுசில் உரையாற்றவுள்ளார். இதன்போது மகிந்த ராஜ பக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்களை நடத்துவதற்கும் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment