Translate

Tuesday 5 June 2012

ஈழத் தமிழர்களின் தொடர் ஆர்ப்பாட்டம் ; தற்பாதுகாப்புக் கருதி மஹிந்த உரை ரத்து


பிரித்தானிய மகாராணி முடிசூட்டு வைர விழாவுக்காக மான்சன் ஹவுஸ் அரங்கில் நாளை மஹிந்த ராஜபக்‌‌ஷ உரையாற்ற திட்டமிட்டபோதிலும் அது ரத்து செய்யப்பட்டதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
நாளை காலை உரையாற்ற திட்டமிடப்பட்டபோதிலும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

புலப்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமானது, தான் உரையாற்ற இடஞ்சலை ஏற்படுத்தும் என்பதனாலும், தற்பாதுகாப்புக்காகவுமே இவ் உரையாற்றும் திட்டத்தை இரத்து செய்ததாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சில் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் ஒன்று இருந்தபோதிலும் குறிப்பிட்ட நேரத்தில் அக்கலந்துரையாடல் ரத்துச் செய்யப்பட்டு அதுவும் இன்று மாலை வேளையே இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
"இந்நிலையில் நாளைய நிகழ்ச்சி நிரல்களிலும் மாற்றங்கள் ஏற்படலாம், இல்லை இரத்துச் செய்யப்படலாம் என அறிவித்துள்ள போதிலும், மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சில் உரையாடலும் விருந்துபசாரமும் 1மணிக்கு ஆரம்பிக்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றுதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக, பலமான கோசங்களை எழுப்புவோம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2ம் இணைப்பு
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தை அடுத்து மான்ஷன் ஹவுசில் நடைபெறவிருந்த நிகழ்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் மதிய போசனமும் ஏனைய நிகழ்வுகளும் திட்டமிட்டபடி Marlborough Houseசில் நடைபெறும் என பொதுநலவாய வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
இது ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்ட உணர்வுள்ள பிரித்தானியா வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
முதலில் தமிழ் அமைப்புக்களின் மகஜர் மற்றும் கடிதங்களின் காரணமாக மகிந்த ராஜபக்சேவின் பேச்சு நிற்பாட்டப்பட்டிருந்த நிலையில், தொடர் போராட்டங்களின் காரணமாக பாதுகாப்புக் கருதி அந் நிகழ்வே ரத்து செய்யப்பட்டிருப்பது, முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
நாளை ஐரோப்பாவிலிருந்து உணர்வாளர்கள் வரவிருக்கும் நிலையில், பிரித்தானியா வாழ் உணர்வுள்ள தமிழர்கள் யாவரையும் அணி திரண்டு வந்து, இனிமேலும் பிரித்தானியா ராஜபக்சே போன்ற இன வெறியர்களை தங்களது நாட்டிற்கு வரவழைக்காது இருப்பதற்கும், ராஜபக்சே இனிமேல் தனது வாழ்நாளில் பிரித்தானியாவிற்கு வருவதை கனவிலும் நினைத்து பார்க்காமல் இருப்பதற்கும் தமது எதிர்ப்பினை காட்டுமாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அழைக்கின்றது.

No comments:

Post a Comment