Translate

Monday 4 June 2012

நவீன கிட்லரை நாட்டை விட்டுத் துரத்துவோம் திரண்டு வாருங்கள்!


 அன்பான பிரான்சு மற்றும் ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!      
21ம் நூற்றாண்டின் மாபெரும் இனஅழிப்பை மேற்கொண்ட நவீன கிட்லர் என்று நோக்கப்படும் சிங்கள ஆட்சியாளன், அத்தேசத்தின் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட  சனாதிபதி மகிந்தா ராஐபக்சா, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அதிராணியாகிய எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு தனது ஆட்சியதிகாரத்திற்குட்பட்ட காலனித்துவ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைச்  சாதகமாக்கி பயன்படுத்திக் கொண்டு வருகை தரவிருக்கின்றதும், தனது இனவழிப்பை நியாயப்படுத்தவொரு சந்தர்ப்பமாகவும் பார்க்கின்றனர்.

அன்பான எங்கள் தமிழ்ப்பேசும் மக்களே!
ஒன்றா? இரண்டா? எமது உறவுகள் மண்மீது சரிக்கப்பட்னர். மனிதகுலமே நினைத்துப்பார்க்க முடியாத வெட்கித்தலைகுனிய வேண்டிய மாபெரும் இன அழிப்பை எமது கண்முன்னால் நம் காலத்தில் நமது  குலத்தை அழித்த கொடியபாவி எம் கண்முன்னால் நிற்பதா அதை நாம் அனுமதிப்பதா?
மானமே வாழ்வெனக்கூறி வாழ்ந்த எம்தாய்க்குலப்பெண்களை காமப்பசிக்கு இரையாக்கிக்கொள்ளுமாறு கட்டளையிட்ட காமுக வம்சத்தைச் சேர்ந்த மகிந்த ராஐபக்சா நாம் வாழும் நாட்டில் காலடி எடுத்து வைப்பதா?
இதனை உலகம் மனிதம் , சனநாயகம், உரிமை, போர்க்குற்றம், காத்திருப்பு, அரசியல் என்கின்ற சொற்பதங்களையும் கூறி எமதினத்தை அமைதிப்படுத்த முனைகின்றதா?
தமிழ் மக்களின் உணர்வுகளையும், மனிதத்தையும், மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும், கொள்கையில் இருக்கின்ற உறுதியையும் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா! எத்தனை அழுத்தங்களும், நெருக்கடிகளும், சிங்கள அரசும், அதற்கு துணைபோகின்ற நாடுகளும் தந்தாலும் அவற்றை எதிர் கொண்டு அடிபணிந்து – தலைகுனிந்து- அடிமைப்பட்டுகிடந்த தமிழனை ஆர்த்தெழுந்து படைதிரட்டி  அடிகொடுத்த வென்ற பொற்காலப்பிதாமகனின் வழியில் நிற்க வேண்டியவர்கள அல்லவா நாங்கள்.
தத்தமது தேசங்களிற்கும், இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையைத்தேடித்தந்த , உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில்  ‘ பிரபாகரன்” என்ற பெயர் பொறிக்கப்பட்டு தமிழீழத்திற்கும், தமிழினத்திறகும் ஓர் அழியதா புகழையும், தலைநிமிர்வையும்  தந்தவரின்  காலத்தில் வாழும் தமிழர் நாம் ஆண்டு மூன்றல்ல மூன்று கோடியானாலும்  அடிமைப்படுத்தி அழித்து அலங்கோலம் செய்தவனையும், விடமாட்டோம் என்று உறுதி கொள்வோம். உணர்வுடன் எழுவோம், உடன் செல்லுவோம், என்று உணர்வேற்ற வேண்டிய இன உணர்வு கொண்ட ஒவ்வொரு தமிழனினது கடமையுமாகும். உணர்வுகளைத் தாங்கி ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குப் படையெடுக்கும் தமிழ் மக்களோடு பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் இணைந்து கொள்கின்றனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியாக் கிளையினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 06.06.2012 புதன்கிழமை காலை நடைபெற்றவுள்ள  மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியில்  பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும்  ஏற்பாடு செய்துள்ளனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது தமிழினத்தின் முற்றுப்புள்ளியல்ல. முகவுரை என்று சிங்களத்திற்கும், அதன் அரசுக்கு துணைபோக நினைக்கின்ற சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்துவோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
தொடர்புகளுக்கு :             01 43 58 11 42       அலுவலகம்
திரு. பாலசுந்தரம் 06 14 11 46 10
திரு. ரூபன் 06 06 77 64 99

No comments:

Post a Comment