Translate

Tuesday, 5 June 2012

இன்று தமிழீழப் போராட்ட இயங்குசக்தியாக விளங்கும் புலம்பெயர் மக்களுக்கான முக்கிய வேண்டுகோள்!


அன்பான பிரித்தானிய, ஐரோப்பிய வாழ் தமிழீழ உறவுகளே! இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் போராட்ட நகர்வை எமது ஒட்டுமொத்த மக்கள் சக்தியின் மூலமே முன்னகர்த்தி வெற்றிகொள்ள முடியும். ஈழத்தமிழர்களுடைய போராட்ட இயங்குசக்தியாக இன்று புலம்பெயர் மக்களே உள்ளனர். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் எமது தேசியத் தலைவர் அவர்கள் அந்தப் பொறுப்பை எமது புலம்பெயர் மக்களிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார். புலம்பெயர் மக்களாகிய நாம் அனைவரும் இன்றைய காலத்தின் வரலாற்றுக் கட்டாயத்தை உணர்ந்து, எங்கள் நிலைப்பாட்டை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு, ‘நாம் ஓய்ந்துவிடவில்லை! எமக்கு வேண்டும் தமிழீழம்! எங்கள் போராட்டத்தை நசுக்கிய உலகமே, எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தா!’ என்ற செய்தியை நாம் ஒன்று திரண்ட மக்கள்திரட்சியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

இன்று நிர்க்கதியாக தாயகத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்கள் உறவுகளுக்கு தற்போது ஓர் நிம்மதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதேவேளை, எமக்கான தமிழீழ சுதந்திரத்தை மீட்கும்வரை நாம் ஓயாது எமக்குக் கிடைக்கின்ற வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய ஓர் பாரிய வரலாற்றுப் பொறுப்பு இன்று எமது புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் கைகளிலேயே தங்கியுள்ளது.

எனவே, இந்த வரலாற்றுப் பொறுப்புகளை சுமக்கின்ற எமது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் உறவுகள், இன்று பிரித்தானியா மண்ணில் சுதந்திரமாக நடமாடித்திரியும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எவ்வாறான எதிர்ப்பைக் காட்டப்போகின்றார்கள் என்று உற்று நோக்கிக்கொண்டிருக்கும் உலகிற்கு நாம் ஒர் உறைப்பான செய்தியைக் கொடுக்கவேண்டி உள்ளது.

அந்தவகையில், நாளை காலை 9:00 (06.06.2012) மணிக்குமுன்னர் இலண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால்; பெருங்கடல் போல் அணியணியாக எமது மக்கள் திரண்டுவந்து, போர்க்குற்றவாளி மகிந்தவுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாது, எமது சுதந்திரத்திற்கான புலம்பெயர் மக்கள் போராட்டமாக அதைப் பதிவுசெய்ய வேண்டும். எனவே பிரித்தானிய, ஐரோப்பிய வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, உங்களால் முடிந்தவரையான உச்சக்கட்ட கடமையைச் செய்யுமாறு மிகவும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டிக்கொள்கிறோம்.

குறிப்பு: ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்பதற்காக பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகைதரவுள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துதரப்படுகின்றன. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும்:
தொடர்புகட்கு:             01 43 58 11 42       (அலவலகம்)
திரு.பாலசுந்தரம்: 06 14 11 46 10
திரு.ரூபன்: 06 06 77 64 99

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு: 078 713 09 18, 078 662 93 06, 076 224 88 59

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
Tel:            +49 (0) 30 60972472      

ஸ்கொட்லாண்ட் தமிழர் பேரவை: கிளாஸ்கோ
பேருந்து புறப்படும் இடம் – (டிரஉஉhயயெn டிரள ளவயழைn படயளபழற) 5 தரநெ யவ 10.30 p.அ
தொடர்புகளுக்கு – 074055838810

பிரித்தானிய தொடர்புகளுக்கு:
Brighton
Tel:             079 5880 9526      
Bristol
Tel:             079 8887 7604      
Crawley
Tel:             074 0317 9162      
Coventry
Tel:             077 0234 5932      
Tel: 075 844229132
Loughborough
Tel:             077 1699 4333      
Leicester
Tel:             079 3052 2179      
Milton Keynes
Tel:             079 3296 2117      
            077 8740 3642      
Nottingham
Tel:            077 8889 0197      
Tel:             079 8345 4531      
Peterborough
Tel:             079 8423 5206      
Rotherham
Tel:             074 0510 0663      
Scotland
Tel:             074 0583 8810      

நன்றி.

மேலதிக தொடர்புகளுக்கு:-
தமிழர்ஒருங்கிணைப்புக் குழு –பிரித்தானியா
Tamil Coordinating Committee-uk
பிரித்தானியா:              0044 75 50 33 64 14      

http://thaaitamil.co...ீழப்-போராட்ட-இ/ 

No comments:

Post a Comment