இலங்கையில் பதிவாகும் பாலியல் வல்லுறவுகளில் நூற்றுக்கு 89 சதவீதமானவை 16 வயதுக்கும் குறைந்த சிறுமியர் மீது மேற்கொள்ளப்பட்டவை என சோசலிஷ மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் 48 சதவீதமானவை பாலியல் துஷ்பிரயோகங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலையீடுகள் மற்றும் பொலிஸார் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை போன்றவற்றால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு ஆளாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திறந்த பொருளாதார முறையின் கீழ் அனைத்தும் பணத்தினைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதென சமன்மலி குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தினமும், 5 பெண்கள் பாலியல் வலலுறவுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற போதும் உண்மை நிலை மூன்று மடங்கு அதிகம் எனவும் நாளாந்தம் 15 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1990ம் ஆண்டில் இருந்து துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. 1990ம் ஆண்டு – 665, 1995ம் ஆண்டு – 542, 2007ம் ஆண்டு –1397, 2008ம் ஆண்டு – 1592, 2009ம் ஆண்டு – 1624, 2010ம் ஆண்டு – 1854, 2011ம் ஆண்டு நபம்பர் வரை 1636 என்றவாறு பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி 2011ம் ஆண்டு பதிவானதில் 48 சதவீதமானவை பாலியல் வல்லுறவாகும். நீதிமன்றில் நடைபெறும் 15000 வழக்குகளில் 4000 சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாகும் என சமன்மலி குணசிங்க கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்கொடுமைகளை தோற்கடிக்க பெண்கள் அனைவரும் மௌனிக்காது ஒன்றிணைய வேண்டும் என சமன்மலி குணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மாதர் சங்கங்களும் இதற்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
http://thaaitamil.co...-ஆச்சரியம்-இலங/

No comments:
Post a Comment