Translate

Friday 8 June 2012

யாழில் தமிழர் பாரம்பரியத்தின் மற்றுமொரு சான்றாக ‘கூட்டத்தார் கோவில்’ புதிய படங்கள் இணைப்பு


வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது.

பதிப்புரிமை தமிழர் உலகம் .கொம்
12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது.
அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நிகழ்ந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இடங்களை யாழ்ப்பாண அரசு காலத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிக் கூறும் கைலாயமாலை கூறுகிறது. யாழ்ப்பாண அரசுகால நிர்வாகத்தில் வலிகாமம் மிகப்பெரிய நிர்வாக மையமாக இருந்ததாகக் கூறும் வைபவமாலை இக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய இடங்களுக்குமான வணிக, போர்த் தொடர்புகள் வலிகாமத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் ஊடாக நடந்தாகக் கூறுகிறது.
இத்தகைய பல வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட வலிகாமத்தின் தொன்மை வாய்ந்த ஆலயங்களை ஆவணப்படுத்தும் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்களான இக்கட்டுரை ஆசிரியர், விரிவுரையாளர் செல்வி. சசிதா குமாரதேவன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்தப்பயணத்தில் வீரகேசரி நிறுவன ஊடக இணைப்பாளர் திருமதி. உமா பிரகாஷ் இணைந்து கொண்டார்.
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்கள் போரின் காரணமாக அங்கிருந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறிவிட்டதால் அவ்விடங்களுக்கு இலகுவாகப் போக்குவரத்துச் செய்ய முடியவில்லை. பிரதான வீதிகளில் பயணிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி கிராமத்து வீதிப் பயணங்களில் காணமுடியவில்லை. பல குடியிருப்புக்கள் இருந்த இடம் தெரியாது தொலைந்துவிட்டன.பதிப்புரிமை தமிழர் உலகம் .கொம்
பேராசிரியர் பொ.இரகுபதி ஆதிகால, இடைக்கால வரலாற்றில் அரசையும், அரசனையும் பாதுகாக்கும் பொருட்டு தன்னுயிரை துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டதே ‘கூட்டத்தார் கோவில்’ எனக் குறிப்பிடுகிறார்.
இவ்வகையான கோவில்கள் தென்னாசிய நாடுகளில் மட்டுமன்றி ஆபிரிக்கா, மாலைதீவு, இந்தோனேசிய முதலான நாடுகளிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கூட்டத்தார் கோவிலின் தோற்றத்தை நல்லூர் இராசதானி காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு. ஆயினும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானி காலத்தில்தான் கட்டப்பட்டதென்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.பதிப்புரிமை தமிழர் உலகம் .கொம்
இருப்பினும் அதன் பழமையையும் நிராகரிக்க முடியாது. யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் அவ்வரசில் படைவீரர்களாக இருந்தவர்கள் அதே தொழிலைப் பிற்காலத்திலும் தொடர்ந்தனர் எனக் கூறமுடியாது. அதேபோல் பிற நாடுகளில் இருந்து கூலிப்படைவீரர்களாக வந்து யாழ்ப்பாண மன்னர்களுக்கு உதவியவர்கள் இவ்வரசின் வீழ்ச்சியோடு அனைவரும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியதற்கும் ஆதாரங்கள் இல்லை. இவர்கள் போத்துக்கேய, ஒல்லாந்தப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தமது போர்த் தொழிலைக் கைவிட்டு பல்வேறு தொழில்களை ஆற்றப் பணிக்கப்பட்டதைப் போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் இருந்து அறியமுடிகிறது.பதிப்புரிமை தமிழர் உலகம் .கொம்
உதாரணமாக இலங்கையில் சோழர் ஆட்சிக்காலம் தொட்டு படைவீரர்களாக இருந்த செங்குந்தர் சமூகம் பின்னர் நெசவுத் தொழில் புரியும் கைக்குளவர்களாக மாறியதையும், வட கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து கூலிப்படைகளாக வந்து யாழ்ப்பாண அரசில் இணைந்து கொண்ட கறுப்பின மொறாக்கோ படைவீரர்கள் பின்னர் யாழ்ப்பாணத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிடலாம்.
இவ்வாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் படைவீரர்களாக இருந்த பல இனத்தவரும், நாட்டவரும் காலப்போக்கில் அத்தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களில் ஈடுபடவேண்டிய சூழல் தோன்றியதால் அவர்கள் ஆற்றிய தொழிலின் காரணமாக குறிப்பிட்ட தொழிலுக்குரிய சாதிப்பெயர் அல்லது சமூகப் பெயர் தோன்றக் காரணமாகியது. இவர்கள் போர்வீரர்களாக இருந்து பின்னர் பிறதொழிலுக்கு மாறிய போது போர்வீரர்களுக்குரிய ‘கூட்டத்தார் கோவில்’ பின்னர் குறிப்பிட்ட தொழில் புரிந்த சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியிருக்கவேண்டும்.
இவ்வரலாற்றுப் பின்புலத்தை வைத்து நோக்கும் போது இளவாலையில் அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் அரசனுக்கு விசுவாசமாக இருந்து போரில் வீரமரணமடைந்தவர்களுக்காக முதலில் அமைக்கப்பட்டதெனக் கூறலாம். அவ்வாறு போர்வீரர்களாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் வம்சத்தவர் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் பிற தொழில்களுக்கு மாறிய போது அவ்வாலயம் குறிப்பிட்ட தொழில் புரியும் சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியுள்ளதெனலாம். அதன் அடையாளமாக இளவாலைக் கூட்டத்தார் கோவிலைப் பார்க்கலாம்.
பதிப்புரிமை தமிழர் உலகம் .கொம் 

No comments:

Post a Comment