Translate

Tuesday, 29 May 2012

200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம்?


இருநூறு புலிகள்- ("தீவிரவாதிகள") தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் சிறிலங்காவில் தற்போது இருக்கும் நிலையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவத்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து தமிழகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரத்பொன்சேக இவ்விடையத்தை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் புலிகள் உருவெடுப்பது நாட்டிற்கு கேடாய் முடியும் அதனால் தொடர்ந்து களையெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறியுள்ளதன் மூலம் தமிழர்களே புறங்கையால் தள்ளிவிட்ட புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் உண்மை என்றும் அதனை சிறிலங்கா இராணுவமே செய்வதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார் சரத்பொன்சேகா.
வெறும் இருநூறு புலிகள் ஒன்றிணைந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்று பொன்சேகா கூறியிருப்பதில் அரசியல் உள்ளஅர்த்தங்கள் இருந்தாலம் அதுதான் ஆணித்தரமான உண்மையுமாகும்.
சிங்கள முன்னாள் இராணுவத்தளபதிக்கு தெரிந்துள்ள புலிகளின் பலத்தை எமது தமிழ் மக்கள் நம்பாமல் இன்றும் புலம்பித் தவிக்கின்றனர்.
எல்லாம் முடிந்துவிட்டது. இவ்வளவு படை பட்டாளங்களோடு கட்டுப்பாட்டு பகுதியில் நின்றே ஒன்றும் முடியவில்லையாம் இனிமேல் என்னத்தை சாதிக்கப் போகினம்...? சும்மா உந்த நடவாத கதையளை விட்டுவிட்டு உருப்படியா ஏதாவது கதையுங்கோ என எம்மவர்கள் மீண்டும் புலிகளின் வருகை தொடர்பாக பேசுபவர்களிடம் பேசுவது விரக்தியில் மட்டுமல்ல அவர்களிடம் உள்ள அவநம்பிக்கையில் தான்.
இவ்வாறு கூறுபவர்களும் அந்த கருத்திற்கு ஒத்தூதி தூபம் போடுபவர்களும் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். நாம் புலிகளின் பலத்தை பக்கத்தில் இருந்தாலும் இராணுவ அறிவுக்கு வெளியில் நின்றுதான் பார்த்தனாங்கள். ஆனால் பொன்சேகா களத்தில் நேரிடையாக புலிவீரத்தை கண்டுணர்தவன். அவனது வார்த்தைகளில் உண்மைதான் வெளிப்பட்டுள்ளது. சூடுகண்ட பூணை அடுப்பங்கரையை நாடாது. அதனால்தான் மீண்டும் ஒரு போரை சிங்கள தேசம் எதிர்பார்த்திருந்தாலும் எப்பாடுபட்டேனும் தவிர்த்துவிட வேண்டும் என பகீரதப்பிரயத்தனம் செய்துவருகின்றது.
ஏன் என்றால் போர் ஒன்று மீண்டும் ஏற்பட்டால் அதன் புயல்வேகம் சிங்களவர்களையும் சிங்கள தேசத்தையும் எப்படி நூறாண்டுகளிற்கு தலைநிமிர முடியாதவாறு சிதைக்கப் போகின்றது என்பதை எம்மவர்களிடம் சொன்னால் நகைப்பார்கள். ஆனால் சிங்கள அரசதலைமைக்கு ஆணித்தரமாகத் தெரியும்.
இருபதிற்கும் குறைவான கரும்புலி மாவீரர்கள்தான் கட்டுநாயக்கா கூட்டுப்படைத் தளத்தை தகர்த்தெறிந்து பலவிமானங்களை சாம்பலாக்கி பல்லாயிரம் கோடிகளை நொடிப்பொழுதில் அழித்து சிங்களத்திற்கு பெரும் பொருளாதார இராணுவ இழப்புகளை ஏற்படுத்தியதை மறந்துவிட முடியுமா…?
அனுராதபுரம் வான்படைத்தளத்தை தமிழீழ வான்படை துணைகொண்டு துவம்சம் செய்து உலகையே அதிசயிக்க வைத்தவர்கள் வெறும் 21 கரும்புலி மாவீரர்கள்தான் என்பதை மறுக்கத்தான் முடியுமா…?
தமிழீழ விடுதலைப் புலிகளை குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கிவிட்டோம். அவர்களிடம் இரண்டே தெரிவுதான் உள்ளது. ஒன்று சரணடைவது மற்றையது கடலுக்குள் பாய்ந்து தற்கொலைசெய்வது. எது என்பதை புலிகள் முடிவெடுக்கட்டும் என ஆணவம் கொண்டு சிங்களம் கொக்கரித்து நின்ற போது வீதிகளே இல்லாத நிலையில் இரண்டு வானூர்திகளை இயக்கி கொழும்பில் அரை மணிநேரத்திற்கு அதிகமாக பறந்துதிரிந்து வான் கரும்புலித்தாக்குதல் நடாத்திய கேணல் ரூபன் அண்ணாவும் லெப்.கேணல் சிரித்திரன் அண்ணாவும் எத்தனையாயிரம் பேரிற்கு சமமான சாதனையை சரித்திரத்தில் பதிவுசெய்து வீரகாவியமானார்கள்…?
இவற்றைப்போன்று நாற்பதாயிரம் மாவீரர்கள் நிகழ்திய வீரம் செறிந்த போராட்டத்திறன் இதுவரை தமிழினம் கண்டிராத விடுதலைப் போராட்ட அமைப்புகளில் சிகரம்தொட்ட மாவீரமல்லவா! தாயக கனவை நெஞ்சத்தில் சுமந்து விடுதலை கணலை கண்களில் எரியவிட்டு தலைவனை சிந்தையில் நிறைத்து களமாடப் புறப்பட்டுவிட்ட புலிவீரனிற்கு ஒப்பானவர்கள் எவருமில்லை.
அப்படிப்பட்ட இலட்சிய வேங்கைகள் இருநூறு பேர் என்ன இருபதுபேரே சிறிலங்கா தேசத்தின் தலைவிதியை என்ன தலைமையினையே தீர்மாணிக்கப் போதும்.
ஒன்று பத்தாய் பத்து நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் பல்லாயிரமாய் அணிதிரழ்வோம். சுதந்திர தமிழீழ நாட்டை மீட்டெடுப்பது என்ற ஒற்றை இலட்சியத்தோடு புலியாய் எழுவோம்!. தமிழர்களாக நசுக்கப்பட்ட நாம் மீண்டும் புலிகளாக எழுவதே எமது விடுதலைக்கான வலிமைசேர்க்கும்!.
நம்புங்கள் எங்களால் முடியும். இழந்த உயிர்களைத் தவிர எமது நாட்டையும் மக்களையும் அன்நிய ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும். நம்பிக்கையுடன் களமாடுங்கள் வெற்றி நமதே!.
நன்றி-ஈழதேசம் இணையம்.

No comments:

Post a Comment