சண்டிலிப்பாய் கோவிலில் கடந்த வியாழக்கிழமை பகல் வேளை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொள்ளையில் 130 வருட பழைமை வாய்ந்த மூன்று ஐம்பொன்னிலான 75 கிலோ கிராம் நிறையுள்ள விக்கிரகங்கள், தாம்பாளங்கள், குத்துவிளக்குகள், பஞ்சாராத்திகள் அனைத்தும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது. இவற்றின் இன்றைய பெறுமதி ரூபா 20 இலட்சத்துக்கும் மேற்பட்டது என ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காலை 9 மணிக்கு பூசை நடைபெற்று ஆலயம் பூட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு பூசைக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின்னர் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். கடந்த வருடம் வைகாசி மாதம் இதே ஆலயத்தில் பிள்ளையார் சிலைகள் இரண்டு திருடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. _

No comments:
Post a Comment