Translate

Saturday, 2 June 2012

வடமகாணத்திலுள்ள ஒரு குடும்பத்துக்கு தலா 1 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது _


  வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள ஒரு குடும்பத்துக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட வடமாகாண செயலணிக் குழுவால் பல பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் நன்கொடைகள் மற்றும் கடன்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்திப் பணிகள் மிகவும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகச் தெரிவித்துள்ள சந்திரசிறி, இந்த மக்களுக்கான மீள்கட்டுமானப் பணிகள், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
_

No comments:

Post a Comment