Translate

Tuesday, 29 May 2012

யாழில் விடுதி நடாத்தி “மாமா” வேலை பார்த்தவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு


யாழ்.குடாநாட்டில் விருந்தினர் விடுதிகளில் அதிகரிக்கும் காதல் ஜேடிகளின் காமலீலைகள். இதனை முற்றாக நிறுத்தவதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.


அந்த வகையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் விருந்தினர் விடுதி என்ற பெயரில் திருமணமாகாத காதல் ஜோடிகளை தங்கியிருக்க வைத்து கலாச்சர சீரழிவில் ஈடுபடும் விடுதிகளை சீல் வைப்பதுடன் அதன் உரிமையாளரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள “நாது விருந்தினர் விடுதி” யைப் பயன்படுத்தி விபச்சர நடவடிக்கைக்கு துணைபோன விடுதி உரிமையாளரைக் கைது செய்யுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்.மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள நாது விருந்தினர் விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுவதாகவும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் ஜேடியாக அங்கு சென்று வருவதாகவும், இந்த விடுதியில் தங்குபவர்கள் தங்களது அடையாளத்தையோ பதிவினையோ மேற்கொள்வதில்லை எனவும் மதுசாராயம் விற்பனை, புகைத்தல் மற்றும் மருந்துப் பொருட்கள், சீடிகள் அங்கு காணப்படுவதாகவும் அந்த விடுதியை தடைசெய்யுமாறு இந்த வழக்கின் குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, எதிர்வரும் ஜுன் 16 ஆம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையளைரைக் கைது செய்து மன்றில் ஆஜராகுமாறு யாழ்.பொலிஸருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment