
சுவேந்திரன் என்ற இலங்கை அகதி இது தொடர்பில் உளவுத்துறை பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சுவேந்திரன் யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்ததுடன் மீண்டும் இலங்கைக்குச் செல்ல மறுத்து வருகிறார்.
இவர் கடந்த வாரம் சிட்னி குடிவரவு வீட்டுத் தொகுதியில் வைத்து பாதுகாவலரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது காற்சட்டை களையப்பட்டு தான் சோதனை செய்யப்பட்டதாக சுவேந்திரன் வில்லாவூட் முகாமில் உள்ள தனியார் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை சோதனை செய்வதை வீடியோ எடுக்க முயற்சிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதும் ஆடை களைந்து சோதனை நடத்தப்படவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் மறுத்துள்ளது.
வில்லாவூட் முகாமின் 8ம் இலக்க வீட்டில் கடந்த செவ்வாயன்று சோதனை நடத்தப்பட்டதாகவும் பில்லியர்ட் அட்டவணை குச்சிகளை உடைத்து பந்துகள் போல செய்யப்பட்டிருந்ததாகவும் இவை வன்முறைக்கு பயன்படுத்தக்கூடியது எனவும் குடிவரவுத் திணைக்கள பேச்சாளர் சந்தி லோகன் தெரிவித்துள்ளார்.
காவலாளியின் தேடுதலின் போது தடுத்துவைக்கப்பட்டிருந்த சிலர் தவறாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 15 காவலாளிகள் தனது வீட்டுக்குள் நுழைந்ததாகவும் காரணம் கோரிய வேளையில் ஒருவர் தனது ஆடையை களைந்ததாகவும் சுவேந்திரன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் வழக்கத்திற்கு மாறானது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு இலங்கையில் இருந்து தப்பி மலேசியாவிற்குச் சென்ற சுவேந்திரன் அங்கு தனிஸ் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்ததுடன், அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
No comments:
Post a Comment