Translate

Tuesday, 29 May 2012

பீரிஸ் என்ன கூறினாலும் அமெரிக்கா அதை நம்பாது; இராஜாங்க பேச்சாளர் விக்டோரியா


 
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எதைக் கூறினாலும் நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் இதனைத் தெரிவித்தார். இலங்கை வெளிவிவார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோவில்ச் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட், இலங்கையுடனான சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன். நாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

பீரிஸ் எதைக் கூறினாலும் அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்கும் என்ற கருத்து அமைச்சர் பீரிஸின் கதையை அமெரிக்கா நம்பவில்லை என்பதையே சுட்டிக் நிற்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதேவேளை இச் செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காப்புரிமை: வலம்புரி


No comments:

Post a Comment