Translate

Monday, 28 May 2012

பிரித்தானியர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இந்திய வாடகைத்தாய்மார்


வாடகைத்தாய்மூலமாகக் குழந்தை பெறும் தொழில் பெரும்பாலும் பிரித்தானியர்களாலேயே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றதாக அறியப்படுகின்றது.

தற்போது 1000 வாடகைத்தாய்ப் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான அனைத்திலுமே பிரித்தானியப் பெற்றோர்களுக்காகக் குழந்தைபெற்றுக்கொடுக்கும் பெண்களே காணப்படுகின்றனர்.


பெற்றோர்களாகவும் தனியாட்களாகவும் வரும் பிரித்தானியர் ஒரு குழந்தைக்காக 25,000 பவுண் கொடுக்கின்றனர். பிரித்தானியாவில் வர்த்தகரீதியான வாடகைத்தாய் முறைமை சட்டவிரோதமானதாகும்.

கடந்த வருடம் மட்டும் ஏறத்தாழ 2000 பிறப்புகள் வாடகைத் தாய்மார் மூலம் கிடைத்துள்ளன. இதிலும் இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களாக பிரித்தானியர்களே உள்ளனரென்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் பிரித்தானியரின் பிள்ளைகளாக மட்டும் 1000 குழந்தைகள் பிறந்துள்ளன. பிரித்தானியாவிலோ கடந்த வருடம் 100 வாடகைத் தாய் மூலப் பிறப்புகள் இடம்பெற்றுள்ளதாகப் பதியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த முறைமையானது வருடாந்தம் 1.5 பில்லியன் பவுண்களைப் பெற்றுத்தருகின்றதென்கின்றனர் இந்திய அதிகாரிகள். அத்துடன் இதன் அளவும் அதிகரித்துவருகின்றதென்கின்றனர்.

இதனால் இதனை விரைவாகச் சீராக்கவேண்டிய தேவையும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிள்ளைபெற்றுக்கொள்ளும் பிரித்தானியப் பெண்கள் தாங்கள் தாய்மையடைவதையும் பிள்ளை பெறுவதையும் தவிர்ப்பதானது கருப்பையை வாடகைக்கு விடும் நடைமுறையை அதிகரிக்கச் செய்யலாமென்ற அச்சமெழுந்துள்ளதென்கின்றனர் வைத்தியர்கள்.

இந்தியாவிலுள்ள பெண்களுக்கு முட்டைகளை வழங்கவும் பிள்ளைகளைப் பெறவும் 6000 பவுண்கள் கொடுக்கப்படுகின்றன.

இது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டதாகும். வங்கிப் பணியாளர்கள், மூத்த சமூகப் பணியாளர்கள், தேசிய நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்கள்கூட இந்தியாவில் வந்து வாடகைத்தாய் முறைமூலம் பெற்றோர் ஆகின்றனர் என்கின்றனர் பிரித்தானிய வைத்தியர்கள்.

குழந்தைத் தொழிற்சாலை என்ற பாரிய செயற்பாடு தற்போது இந்திய அரசின் உயர்மட்டங்களை அக்கறை கொள்ளவைத்துள்ளது.

இந்தத் தொழில் உலகின் வேறெந்தத் தொழிலையும்விட அதிக இலாபத்தைத் தருவதாக ஒரு நிபுணர் தெரிவித்தார். இத்தொழிலைச் சீராக்குவதற்காக இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட ராதே சர்மா என்ற வைத்தியர் கூறுகையில்,

தனது ஆய்வின்படி உண்மையில் இந்தக் குழந்தைத் தொழிற்சாலையின் அளவுபற்றி எவருக்குமே சரியாகத் தெரியவில்லை என்றார்.

அத்துடன் இத்தொழிலின் வேகத்தைக் குறைக்கமுடியாதளவு இது பிரபல்யமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இதுபற்றிய சட்டமொன்றை அரசு வெளியிடவுள்ளதாகவும் எனினும் அச்சட்டம் வருவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கலாமென்றும் அதற்குள் இத்தொழில் உருப்பெருத்துவிடலாமென்றும் அச்சந்தெரிவித்தார்.

டில்லியிலுள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் தனியே பிரித்தானியர்களாகவே இருப்பதாகவும் இதில் அரைவாசிப் பேர் ஓரினத் தம்பதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment