
மண்டைதீவில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட இரு குடும்பஸ்தர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மேற்படி இரு நபர்களும் இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு கலாசார சீரழிவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும் அண்மையில் இவர்கள் இரு பெண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபட்ட போது மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸõரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் பொலிஸார் எதுவித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் அவர்களை விடுவித்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலமே சமூகச் சீரழிவுகளை தடுக்க முடியுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment