Translate

Tuesday 29 May 2012

சிறுவயதில் தமிழர்கள் என்றால் யார் என்று எனக்குத் தெரியாது !


நான் சிறுவயதாக இருந்த காலகட்டத்தில், தமிழர்கள் என்று ஒரு இனம் இருப்பதே எனக்குத் தெரியாது என்று கோத்தபாய BBC நிருபருக்குத் தெரிவித்து காமடி பண்ணியுள்ளார். பல பொதுமக்கள் காணமல் போவது தொடர்பாகவும், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் BBC செய்தியாளர் கோத்தபாயவிடன் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கோத்தபாய, வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல முழு இலங்கைக்கும் சொந்தம் என்று கூறியுள்ளார். அங்கே சிங்களவர்கள் காணிகளை வாங்கலாம் என்று தெரிவித்த அவர், தான் சிறுவயதில் அம்பாந்தோட்டையில் இருந்தவேளை அங்கே தமிழர் என்று ஒரு இனம் இருக்கவில்லையாம் என்றும் தெரிவித்துள்ளார்.


ஆனால் இப்போது பார்த்தால், அம்பாந்தோட்டையில் தமிழர்கள் வசிப்பதாகவும், அப்படி என்றால் வடக்கில் ஏன் சிங்களவர்கள் வசிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். காணமல் போகும் நபர்கள் குறித்து கேட்க்கப்பட்டபோது, காணமல் போகும் நபர்கள் பாதள உலகக்கோஷ்டியினரோடு தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் சிலவேளை போதைப்பொருள் வியாபாரியாகக் கூட இருக்கலாம் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே அவர்கள், இந்தியா சென்றுவிட்டு, அவர்கள் பெற்றோரைக் கொண்டு தாம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவிப்பதாகவும் கோத்தபாய புது விளக்கம் கொடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டது, வெறும் 6000 பேர் தான் என்று தெரிவித்த கோத்தபாய, இவர்களுள் போராளிகளும் அடங்குவதாகத் தெரிவித்தார். அதாவது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 6000 பேருக்குள்ளேயே போராளிகளின் எண்ணிக்கையும் அடங்குவதாகவும், பொதுமக்கள் என்று குறிப்பிடும்போது மிகச் சொற்பமான அளவு மக்களே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். கோத்தபாய தெரிவித்திருக்கும் கருத்துக்களின் மாற்றம் இல்லை ... ஆனால் அவர் நேர்காணல் வழங்கும் விதம் வெகுவாக மாறியுள்ளது. வழமையாக நிருபர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு கோபப்பட்டு பதற்றத்துடன் பதிலளிக்கும் கோத்தபாய, இம்முறை அதனை முற்றாகவே மாற்றியுள்ளார்.

தான் சாந்தமாகப் இருப்பதுபோலவும், அடக்கமாகப் பதில்தருவதுபோலவும் நடித்துள்ளார். ஆனால் என்னதான் நடித்தாலும், தமிழர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவர் டென்ஷனாவது அவர் முக பாவத்தை வைத்தே காட்டிக்கொடுத்து விடுகிறது அல்லவா ...



No comments:

Post a Comment