Translate

Tuesday, 25 September 2012

இலங்கை சிறையில் தமிழக மீனவர் சாவு: ஆயுள் தண்டனை பெற்றவர்


இலங்கை சிறையில் தமிழக மீனவர் சாவு: ஆயுள் தண்டனை பெற்றவர்ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது62). மீனவரான இவர் கடந்த 2004ம் ஆண்டு மீன்பிடிக்க சென்றபோது, இலங்கையின் தலைமன்னார் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் கோர்ட் தீர்ப்பளித்தது. 


இதையடுத்து அவர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் மீனவர் தங்கராஜ் நேற்று மாலை மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்ததாக தமிழகத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு இலங்கையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. தமிழக கடற்படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து தங்கராஜின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

No comments:

Post a Comment