Translate

Tuesday, 25 September 2012

வெற்றிலைக்கு தமிழர்கள் வாக்களித்த முட்டாள் தனத்தால் முஸ்லீமும் சிங்களவரும் அமைச்சர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்ததன் பலனாக சிங்கள பேரினவாத கட்சி ஆட்சி அமைத்ததன் பலன் இன்று முஸ்லீம்களும் சிங்களவர்களும் கிழக்கு மாகாணசபையில் அமைச்சர்களாகவும் சபாநாயகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராசபக்ச அரசினால் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாரியான எடுத்துக்காட்டாகும்.  கிழக்கு மாகாணத்தில் 40வீத தமிழர்களும், 37.5வீத முஸ்லீம்களும், 22வீத சிங்களவர்களும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதற்காக ஹக்கீம், ஹிஸ்புல்லா போன்ற முஸ்லீம்கள் ஆட்சி அதிகாரத்தை சிங்களவர்களின் கைகளில் கொடுத்து விட்டு மகிந்த ராசபக்ச கிள்ளித்தெளிக்கும் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
 
கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் உபசபாநாயகர் பதவி பிரமாணம் செய்த போது ஒரு தமிழரை கூட மகிந்த நியமிக்கவில்லை.
 
தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தால் இன்று கிழக்கு மாகாண ஆட்சி தமிழர்களின் கைகளில் இருந்திருக்கும். தமிழர்கள் தமது தாயக பூமியை காத்திருக்க முடியும். ஆனால் பிள்ளையான் கருணாவுக்கு பின்னால் சென்ற முட்டாள் தனத்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள பேரினவாதிகளின் கைகளில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
 
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
 
விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 
ஹாபிஸ் நஸீர் அஹமட்- விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் – சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் – நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
இவ்வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment