கிழக்கு மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவியதன் மூலம் வரும் விளைவுகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் அனுபவிக்கத்தான் போகிறது.
முஸ்லிம் மக்களின் மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் இன்று உயிரோடு இருந்திருந்தால் இப்படியான முடிவை எடுத்திருக்கவே மாட்டார். அதனை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். எனது இந்தக் கூற்றுடன் முஸ்லிம் மக்களும் உடன்படுவார்களென நம்புகிறேன்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், குறிப்பிட்டார்.
வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ், மக்களிடம் கபட நாடகம் ஆடியிருப்பதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் மகன் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தமிழ்க் கூட்டமைப்பு முன்வந்தபோதும், முஸ்லிம் காங்கிரஸ் அதனை உதாசீனப்படுத்திவிட்டது எனவும் சாடியிருக்கிறார்.
“கிழக்கில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கேற்ற களத்தை உருவாக்குவதில் தவறு இழைக்கப்பட்டுள்ளது. அதற்கான முழுப்பொறுப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்க வேண்டும். எவ்வாறாயினும் தமிழ் பேசும் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த உரிமைப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களை ஒருபோதும் அநாதரவாக விட்டு விடாது. அவர்களை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம்” என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment