Translate

Tuesday 25 September 2012

பள்ளி மாணவிகளை கடத்தி கடாபி கற்பழித்தது அம்பலம்


லிபியாவின் முன்னாள் அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரை எதிர்த்து பொது மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக பதவி இழந்தார். போராட்டத்தின் போது புரட்சி படையினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தற்போது அவர் பற்றி அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரான்சை சேர்ந்த பத்திரிகையாளர் ஆன்னிக் கோஜியன் என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டில் சரோயா என்ற 15 வயது மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அவள் கடத்தப்பட்டாள். பின்னர் கடாபியின் படுக்கை அறைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவள் கடாபியால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டாள்.
கடாபி அவளிடம் நீ பயப்படாதே. நான் உனக்கு தந்தையை போன்றவர். ஆனால் நீ என்னை அண்ணன் என்றோ, காதலன் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். நீ எப்போதும், என்னுடன் இங்கேயே தான் இருக்க வேண்டும் என்று கூறினார். இவள் தவிர இது போன்று பல பெண்களின் கற்பை சூறையாடி இருக்கிறார். அவரது ஆசைக்கு இணங்க மறுத்த பள்ளி மாணவிகளை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.
இளம் பெண்களை கடத்தி வந்து அவர்களுக்கு மிக மெலிதான ஆடைகளை அணிவித்து உடல் அழகை ரசித்து இருக்கிறார். செக்ஸ் வீடியோ காட்சிகளை போட்டு அவற்றை பார்க்க வைத்து அவர்களை செக்ஸ் அடிமைகளாக்கி மிகவும் கீழ்தரமாக நடத்தி இருக்கிறார்.
இது போன்ற கொடுமைகள் சுமார் 5 ஆண்டுகள் நடந்துள்ளன. தினமும் பல மாணவிகளை கடத்தி வந்து கற்பழித்து அவர்களின் வாழ்வை அவர் அழித்துள்ளார். கடாபியால் சீரழிக்கப்பட்டு விலை மாதர்களான பல பெண்கள் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment