Translate

Tuesday, 25 September 2012

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா விஜயம்

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா விஜயம்
 

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார்.

உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவுஸில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் 'சிறுபான்மை சமூகமொன்றை வழிநடத்துதல் - ஓர் இலங்கை அனுபவம்" என்ற தொனிப்பொருளில் தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை நாளை ஆற்றுவார்.


உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாகக் கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலைப் பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது. அதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசியச் செயலகம் மலேஷியாவில் கோலாலம்ப+ர் நகரிலும் அமைந்துள்ளன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆலோசனைக் குழுவின் ஆறாவது அமர்விலும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார். அடுத்த மாதம் ஆறாம் திகதி அவர் நாடு திரும்புவார்.

No comments:

Post a Comment