சோமாலியா நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என ஷெபாப் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தப் ஹாஜி முகமத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது படுகொலைக்கு ஷெபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதலின் முதற் கட்ட நடவடிக்கையே இது என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஷெபாப் இயக்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சோமாலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவர்.
அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பிலிருந்து(அரசாங்கத்திலிருந்து) வெளியேறா விட்டால் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment