மஹிந்தருக்கு வெடிவைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளனர்
”ஜனாதிபதிக்கு வெடி வைக்க…” என்ற தலைப்பில் அண்மையில் வெளியான “சண்டே லீடர்“ பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரை தொடர்பில் இதுவரை “சண்டே லீடர்“ நிறுவனத்தைச் சேர்ந்த பலரிடம் இரகசியப் பொலிஸாரினால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. “சண்டே லீடர்“ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸ் மற்றும் இந்த நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகியோரிடமும் இரகசியப் பொலிஸார் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளனர். இந்த வாக்கு மூலங்கள் கொண்ட அறிக்கையை இரகசியப் பொலிஸார் விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளனர்.
“சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையருக்கு வெடிவைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளனர்“ என்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment