இனத்தின் விடுதலையை அடையாளப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் இன்று உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழின விடுதலைக்காய்த் தலைவன் வழியில் போராடிவரும் தமிழ் மக்கள், ஐ நா சபையின் முன்றலில் தமது நீதியின் அவசியத்தை வலியுறுத்தி நேற்று நடாத்திய பொங்குதமிழ் நிகழ்வு தமிழர்கள் இறுதிவரை தமது விடுதலைக்காய்ப் போராடியே தீருவார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற பொங்குதமிழ் நிகழ்வுடன் நடைபெற்ற பேரணி நேற்று (22.10.2012) மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் நேற்று (22.09.2012) இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய வாழ் தேசமெங்கும் இருந்து வருகை தந்த மறாவாத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்........................ read more
No comments:
Post a Comment