தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த பெண்களினதும் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சு லண்டனில் நிகழ்வொன்றினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (22.09.2012) இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் தமிழர் அமைப்பு பிரநிதிகள் உட்பட பன்முகத் தளங்களில் இருந்தும் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்து சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பாக நா.த.அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட விருந்துபசார ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை (22.09.2012) மாலை இலண்டனில் உள்ள Sun Lounge என்னும் மண்டபத்தில் நடைபெற்றது. தாயகத்தில் போரில் கணவனை இழந்த பெண்களினதும் ஆதரவற்ற சிறுவர்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும்;, எமது அமைச்சின் கடந்தகால செயற்பாடுகளை விளக்கவும், எமது மக்களின் சந்தேகங்களைப் போக்கவும், எதிர்கால செயற்திட்டங்களுக்கான ஆலோசனையையும் ஆதரவினையும் பெறுவதற்கும், எமது அரசாங்கத்தை தமிழர் அல்லாதோர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டுமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி. விரேந்திர சர்மா, திருமதி. மகேஸ்வரி, திருமதி. மன்மதன், திருமதி. ராஜ்கரண், திருமதி. ஜெயரட்ணம், திருமதி. லாவண்யா, திருமதி. சீவரெட்ணம் ஆகியோர் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயகத்தின் விடுதலைக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்ததைத் தொடர்ந்து 'தாய் மண்ணே எங்கள் வணக்கம்' என்னும் பாடல், காணொ ளியுடன் காட்டப்பட்டவேளை அனைவரையும் ஒருகணம் தாயகத்திற்குக் கொண்டு சென்றதை அவர்களின் கண்களில் அரும்பிய நீரே சாட்சியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து பரதநாட்டிய குரு அம்பிகை சீவரெட்ணம் அவர்களின் மாணவி செல்வி. அகிம்சா திருநாவுக்கரசின் பரதநாட்டியமும், செல்வி. ஊர்த்திகா ஸ்கந்ததேவா அவர்களின் நடனமும், செல்வி. கீர்த்திகா ஸ்கந்ததேவா அவர்களின் பாடலும் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் நிகழ்த்த, அதனைத் தொடர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களானgpdHfshd Hon. Virendra Sharma, Hon. Siobhan Mc Dcdonagh ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Hon. Claude Moraes, Dr.Onkar Sahota (London Assembly Member), Clr Julian Bell, Mr.Graham (Act Now) ஆகியோர் உரையாற்றினார்கள்.Rt. Hon. Joan Rayan கலந்துகொண்டு சிறப்பித்தமையும், பல பிறஇன மக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற் குரிய அருட்தந்தையார் இமானுவேல் அவர்களும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் நீண்டகால உறுப்பினர் திரு. குமார் குமரேந்திரனும் கலந்து கொண்டு உரையாற்றியும் இருந்தனர். மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளும், மற்றைய தமிழ் அமைப்புக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான கௌரவ அமைச்சர் திரு. மகிந்தன் (பிரான்ஸ்), கௌரவ உதவி அமைச்சர் திருமதி. தணிகா சுப்பிரமணியம் (ஜேர்மனி), கௌரவ அரசவை உறுப்பினர் திரு. ராஜேந்திரா (ஜேர்மனி) ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இந்நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
நாடுகடந்த அரசாங்கத்தின் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகளான கௌரவ உதவி அமைச்சர் திரு. மணிவண்ணன், கௌரவ உறுப்பினர்களான திரு. நிமலன் சீவரத்தினம், திரு. யோகலிங்கம், திரு. மனோரஞ்சன், திரு. சுரேன், திரு. சந்தோஷ், திருமதி. ஆர்த்தி ஆறுமுகம், திரு. வைரவமூர்த்தி, திரு. குணசீலன் மற்றும் திரு. கவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஊக்கப்படுத்தி இருந்தனர். எமது அமைச்சின் நிரந்தர செயலாளர் திரு. விஜய் ஜெயந்தன் அவர்களின் ஆக்கங்களுடனும், திரு. கவிராஜ் சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலுடனும், திரு. சஞ்செய் கருணானந்தன் அவர்களின் வடிவ மைப்பிலும், ஜே.ஆர் அச்சகத்தின் அச்சுப்பிரதியுடனும் ஓர் நூல் வெளி யிட்டு வைக்கப்பட்டது. எமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையையும், மக்கள் அனுப வித்துக் கொண்டிருக்கின்ற சோகத்தையும், சுரண்டப்படுகின்ற நிலத்தையும், அவ்வப்போது அங்கே இருந்த காணொளி திரையில் காட்டப்பட்ட வண்ணம் இருந்தது.
இந்த நிகழ்வினை ஆலோசகர் திருமதி. விஜயா இரட்ணம், திரு. வசந்தன், நிரந்தர செயலர் திரு. விஜய் ஜெயந்தன் மற்றும் இலண்டன் இயக்குனர் திரு. முருகதாஸ் ஆகியோர் திறம்பட ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓலி அமைப்புக்களை திரு. ஆனந்தனும், காணொளியினை திரு. சுரேனும், நிழல்படத்தை திரு. ஜஸ்ரினும், பாடல்-இசை திரு. சந்தோசும், நிகழ்சித் தொகுப்பை திரு. தினேசும், நன்றி உரையினை தமிழில் கௌரவ துணை அமைச்சர் திருமதி. தணிகா சுப்பிரமணியமும், ஆங்கி லத்தில் திருமதி. விஜயா இரட்ணமும் நடாத்தியிருந்தனர். இந்நிகழ்வில் திரு சத்தி என்னும் நாட்டுப்பற்றுள்ள ஒரு இளைஞன் தனது இளம்வயதில் 1997ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறிது சிறிதாகச் சேர்த்த சில்லறைக் காசுகளை தாயகப் பெண்களின் நல்வாழ்வுக்காக அன்பளிப்புச் செய்தது எல்லோருடைய மனதையும் ஒருகணம் தொட வைத்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொடுத்த நன்கொடை தாயகத்தில் வாடும் கணவனை இழந்த பெண்களுக்கு, அவர்களின் கண்ணீரை ஓரளவு துடைக்க உதவுகின்றது என்ற உணர்வோடு சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3698

No comments:
Post a Comment