Translate

Friday, 28 September 2012

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்



தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது.இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஓர் அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கு என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நியு சில்வர் ஸ்டாரில் கூட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடன் வேட்பாளர்களான மருத்துவர் திருமதி இந்திராணி தர்மராஜா, வெ.சுரேஷ், சி.பளீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தொணடர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில்…
“வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எமக்கு அவமானம் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம், அரசுக்கு எதிராக மரச் சின்னத்தில் போட்டியிடுவதே பெருமை என  தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக தீர்வு புறந்தள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கிம் – முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment