Translate

Tuesday, 25 September 2012

கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய கட்சிகள் கூட்டமைப்பில் இணையலாம்..



 தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த பொ ழுது கொள்கை, புரிந்து ண ர்வு அடி ப்ப டையில் ஒத்தியங்குவ தற் காக உருவாக்க ப்ப ட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வள ர்ந் திருக்கிறது.

தமிழர்களின் வலிமையான சக்தியாக சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட் சிகளும் கூட்டமைப்புடன் இணைய முன் வரவேண்டும் ௭ன தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழை ப்பு விடுத்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட் டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தலைவர் சம்பந்தனின் தலை மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அரிய நேத்திரன் ஆகியோர் கூட்டமைப்பினை முன் நக ர்த்துவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி ௭ழுப்பியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

2001, 2004 இல் தமிழீழ விடுத லைப்பு லிகள் இருந்தபோது கொள்ளை அடிப்பை டயில், புரிந்துணர்வு அடிப்படையில் ஒத்திய ங் குவதற்காக உருவாகிய கூட்ட மைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வளர்ந்திருக்கிறது. தேர்தல் காலங்களில் மக்களிடம் கூட்ட மைப்பாகவே ஆணை கேட்கிறோம். பாராளு மன்றத்தில் கூட்டமைப்பு ௭ன்றே பேசுகின்றோம்.

சர்வதேச சக்திகளோடு கூட் ட மைப் பாகவே கலந்துரையாடுகி றோம். சக் தியைப் பெற்றுள்ள கூட்டமை ப்பை யா ரும் உடைத்துப் போடுவதற்கு முனை யக்கூ டாது. இடம்கொடுக்கவும் கூடாது. இத்த கைய சக்தியினால்தான் 2010 ,2011, 2012களில் படிமுறையாக மக்கள் நம்பிக்கையை தேர்தல்கள் ஊடாக வெளிப்படுத்தி வருகின் றார்கள். கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகள் தங்களுடைய சொந்த அடையாளங்களைப் பேணலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் தமிழர்களின் கொள்கைக்காக அவர்களின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்ப ங்கள் நெருங்கி வருகின்றபோது கூட்டமை ப்பு இன்னும் வலிமைபெறவேண்டும்.

கூட் டமைப்பில் உள்ள கட்சிகள் மாத்திரமல்ல கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட்சிகளும் வரலாம். அது குறித்து பரிசீலிக்கவும் தயாராக இருக்கின்றோம். ஆனால் வெறும் உணர்வுகளுக்கு பலி யாகாமல் நிதானம் தவறாமல் பொறுப் போடு செயற்படவேண்டிய காலமென்ப தை ௭ல்லோரும் விளங்கிக்கொ ள்ளவே ண்டும். கூட்டமைப்பைப் பலவீனப்ப டு த்தி, தமிழர்களின் பலத்தை பலவீனப் படுத்தி ௭திர்த் தரப்பைப் பலப்படுத்தி சர்வ தேச முயற்சிகளை வலுவிழக்கச் செய் யும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது.

அதற்கான ஆணை யாருக்கும் மக்களால் வழங்கப்படவில்லை. அரசியல் தீர்வைக் கண்டடைவதற்காக கூட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் உட்படுத்துவதற்கான ஆலோசனைகள் கட்சித் தலைவர்கள் கூட்ட த்தில் ஆலோசிக்கப்பட்டு அதன் தொழி ல்நுட்ப நடவடிக்கைகளுக்காக சட்டவல்லு நர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

அவை குறித்து ௭ட்டப்படும் முடிவுகள் புரிந்துணர்வு உடன்பாடாக உருவாகி கூட்டமைப்பின் செயற்பாடுகள் புலப்படு த்தப்படும் தேர்தல் பணிகள் தீவிரம் பெற் றிருந்ததால் இச்செயற்பாடுகளில் மந்தநி லை இருந்தது. ௭திர்வரும் காலத்தில் தமிழர்களின் வலிமை யான சக்தியாக தமிழ்மக்களும் சர்வ தேசமும் ஏற்றுக்கொள்ளும் சக்தியாகக் கூட்டமைப்பே இருக்கும் ௭ன்றார்.

No comments:

Post a Comment