Translate

Tuesday 25 September 2012

புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு - ஹரிஹரன்


புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு - ஹரிஹரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உயரதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

1987 முதல் 1990ம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது கேணல் ஹரிஹரன் சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுவதற்கு காணப்பட்ட சூழ்நிலை தற்போது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2011ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களின் பின்னர் உலகத் தீவி;ரவாத இயக்கங்கள் தொடர்பிலான அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களைப் போன்று புலிகளினால் மீள இயங்கக் கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழ்ப் பிரிவினைவாதம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் உணர்வுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு வாழ் புலி ஆதரவாளர்கள் பயன்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து பிரிவினைவாத முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏதேச்சாதிகாரமான தீர்மானங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் பலமும் பலவீனமுமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளை இல்லாதொழிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் திடசங்கற்பத்தையும், உலகச் சூழ்நிலையையும் பிரபாகரன் கவனத்திற் கொள்ளாத காரணத்தினால் யுத்தத்தில் தோல்வியைத் தழுவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
300,000 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டமை, வீதிகள் பெருந்தெருக்கள் நிர்மானம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் பாரியளவில் யுத்த வலயத்தில் அரசாங்கம் சேவைகளை ஆற்றி வருpகின்றது.
எனினும், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட சில விடயங்களில் அரசாங்கத்தின் முனைப்பு போதுமானதாக இல்லை.
குறிப்பாக சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொழில் வாய்ப்பு இன்றி அவதியுறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம்
மெய்யான கரிசனையுடன் செயற்பட வேண்டுமென கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சி;னையை பயன்படுத்தி ஜெயலலிதா அரசியல் ரீதியான அனுதாபத்தைப் பெற்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: ரெடிப் தமிழில் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:

No comments:

Post a Comment