தற்போது தடுப்புக் காவலில் 500 போராளிகள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று சிங்கள போர்குற்ற இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
- பாலகுமார், அவரது மகன், புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், சுதா, உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் பிரிவு போராளிகள் எங்கே?
- 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அரச தகவல் திணைக்கள அறிக்கையின் படி 15 000 போராளிகள் சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
- அவ்வாறாயின் அரசின் தற்போதைய கணக்கின்படி மீதி மூவாயிரம் போராளிகளும் எங்கே?
- கொல்லப்பட்டுள்ளார்களா?
- அல்லது இரகசிய முகாம்களில் சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் உள்ளார்களா?
போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.எனக் கூறியுள்ளார்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அரச தகவல் திணைக்கள அறிக்கையின் படி 15 000 போராளிகள் சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அரசின் தற்போதைய கணக்கின்படி மீதி மூவாயிரம் போராளிகளும் எங்கே? கொல்லப்பட்டுள்ளார்களா? அல்லது இரகசிய முகாம்களில் சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் உள்ளார்களா? பாலகுமார், அவரது மகன், புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், சுதா, உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் பிரிவு போராளிகள் எங்கே?
http://thaaitamil.com/?p=33574
No comments:
Post a Comment