Translate

Saturday, 29 September 2012

147 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலைகளுக்கு பெருமை தேடிக்கொடுத்த மாணவிய

147 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலைகளுக்கு பெருமை தேடிக்கொடுத்த மாணவியர் Top News
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப் பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட மட் - ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இம்முறை 9 மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அதில் ஜே.தரணியா எனும் மாணவி 147 புள்ளிகளைப் பெற்று இப் பாடசாலைக்கு பெருமைதனை ஈட்டியுள்ளார். இவ் வெற்றியீட்டலானது 1998ம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாகரை மகா வித்தியாலயத்தில் ஜ.சியனுஜா 154 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். வாகரைப் பிரதேசத்தில் வாகரை மகா வித்தியாலயமும்; ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இம்முறை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment