விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அவ் வகையில், விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் சட்டவிரோத தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு, சென்னையில் நடைபெறவுள்ளது.
குறித்த விசாரணையில் வைகோ பங்கேற்க உள்ளார் என ம.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment