விஜயராஜாவின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற வைகோ, அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, தீக்குளிப்பவர்களை நான் ஆதரிக்க வில்லை. இருப்பினும் எதற்காக தீக்குளித்தார்கள் என்பதை நாம் நினைவு கூர வேண்டும்.
இலங்கையில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் மீது அன்புக் கொண்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.
ஒருவேளை எம்.ஜி.ஆர். மட்டும் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் ஈழ விடுதலையை உருவாக்குவதற்கு என்ன வழியோ அத்தனை போராட்டங்களும் மதிமுகவின் சார்பில் நடக்கும் என்றும் தமிழ் ஈழம் மலரும் வரை ஓயமாட்டேன் எனவும் வைகோ பேசினார்.
|
No comments:
Post a Comment