Translate

Tuesday, 25 September 2012

வடமராட்சியில் மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் அடித்து, இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

யாழ், வடமராட்சி,பொலிகண்டிப் கிராமத்தில்  இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மூன்று இளைஞர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து இழுத்துச்  செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரின் வீட்டிற்கு வந்த சாதாரண உடையில் மோட்டர் சைக்கிளில் வந்த குறித்த கடற்படையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி  மூவரையும் அடித்தவாறு சென்றதாகவும் குறித்த இளைஞர்களின் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த இளைஞர்களின் பெற்றோரால் வல்வெட்டித்துறை காவற்றுறையினரிடம் இச் சம்பவம் குறித்து முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thaaitamil.com/?p=33156 

No comments:

Post a Comment