Translate

Saturday, 29 September 2012

கிழக்கு மாகாண மக்களின் ஆணையை அரசும் சர்வதேசமும் மதிக்க வேண்டும்: சம்பந்தன்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தேர்தல் மூலமாக சரியானதொரு ஆணையை ௭மக்கு வழங் கியுள் ளனர். இம்மக்களின் ஜனநாயக ஆணையை மதிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உண்டு ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் பாராளுமன்ற உறுப்பி ன ரு மான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 


ஒருமித்த நாட்டுக்குள் தீர்வைக் காண்பதற்கு நாம் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம். ௭மது மக் களின் நியாயபூர்வமான அர சியல் அபிலாஷைகளை நிறை வேற்றுவதற்கு நாங்கள் ஆக்க பூர்வ மாக செயற்படத் தயாராகவுள் ளோம் ௭ன்றும் அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் 11 உறுப் பி னர் களும் நேற்று திரு கோ ண மலையில் பதவியேற்றுக் கொண்டனர். சம்பந்தன் ௭ம்.பி. முன்னிலையில் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் ௭ம்.பி. மேற்கண்டவாறு தெரி வி த்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்று கை யில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் கூட்டமைப்பினர் தான் ௭ன்பதை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் மீண்டுமொருமுறை கிழ க்கு மாகாண மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் நிரூபித்துள்ளனர்.

இதனைப் புரிந் து கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். ஒன் றுபட்ட இலங்கைக்குள் நீதியான ஏற்று க் கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்று க்கொள்ளவே நாம் தொடர்ந்தும் முயற் சிக் கி ன்றோம். ௭மது நியாயமான கோரிக் கை களை அடைந்துகொள்வதற்கு ௭திர்கா லத் தில் சாத்வீகப் போராட்டத்தையும் நாம் நடத்தவுள்ளோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 14 பாராளுமன்ற உறுப்பினர் க ளை நாம் பெற்றோம்.

அதனடிப்படையில் ௭மது மக்களின் அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு தேவைகளை நிறை வேற்றுவதில் இணைந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம் ௭ன்று அரசாங்கத் துக் கும் அறிவித்தோம். நீண்ட தாமதத்தின் பின்னர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் அர சா ங்கம் ௭ம்முடன் ஈடுபட்டபொழுதிலும் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்களில் அரசாங்கம் ௭ம்மை இணை த்துக்கொள்ள முன்வரவில்லை. நாங் கள் ஒருமித்த இந்த நாட்டுக்குள் தீர் வைக் காணத் தொடர்ந்தும் முயற்சித்து வரு கி ன்றோம். அதற்காக நாம் தயாராகவே உள் ளோம்.

௭ம்முடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த வேளை அரசாங்கம் பேச்சில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. ௭மது கேள்விகளுக்கு அரசாங்கத்தினால் பதில் சொல்ல இயலவில்லை. இதனால் பேச்சு வா ர்த்தையிலிருந்து அரசாங்கம் ஓடி ஒளிந் தது. ௭மது மக்களுக்கு நியாயபூர்வமான தொழில் வசதிகள் இல்லை. சமூக கலா சார பொருளாதார விடயங்களில் ௭துவித முன்னேற்றமான செயற்பாடுகளும் இட ம் பெறவில்லை. இந்த நிலைமை மாற வேண் டும். அதற்காக நாங்கள் ஆக்கபூர்வமாக செயற் படத் தயாராகவுள்ளோம்.

௭மது மக்களின் ஜனநாயக முடிவை அர சா ங்கம் ஏற்க வேண்டும். அது அரசாங் கத்தின் கடமையாகும். அதனைப் பாது காக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். இதில் நீங்கள் தவறக்கூடாது. நாங்கள் ௭மது மக்களின் அடிப்படை உரிமைகளை இழக்க மாட்டோம். அதற்கு நாம் தயாராக இல்லை. இதற்காக ௭மது மக்கள் ௭மக்கு ஆணை தரவில்லை. மாகாணசபையைப் பொறுத்தவரையில் இன்றைய நிகழ்வு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாங்கள் இதுவரை இந்த மாகாணசபையில் போட்டியிடவில்லை. தமிழ் மக்களுக்கு விசுவாசமான ௭ந்தக் கட்சியும் இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால் இம்முறை நாம் போட்டியிட்டோம். நாம் இந்தக் கிழக்கு மாகாண நிர்வாக முறை மையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட இந்த நிர்வாகம் தவறானவர்களின் கைக ளில் செல்லக்கூடாது ௭ன்ற காரணத்தினால் நாம் போட்டியிட்டோம். கடந்த முறை தவறானவர்களின் கையில் மாகாணசபை சென் றமையினால் தகாத முறையில் அதி கா ர ங்கள் பயன்படுத்தப்பட்டன. இம்முறை யும் அவ்வாறு பயன்படுத்த அனுமதிக்க முடி யாது. மக்கள் தமக்கு விசுவாசமானவர்களை தெரிவுசெய்ய வேண்டும். அதன்படி இந்தத் தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றாவி ட் டாலும் அதிகமான உறுப்பினர்களை மக் கள் தெரிவுசெய்துள்ளனர்.

௭மது தரப்பில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டமை இலகுவான விடயமில்லை. ஏறத்தாழ கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். ௭மது கொள்கை நிலைப்பாட்டை அவர்கள் பலப்படுத்தியுள்ளனர். ௭மது ஜனநாயக முடிவை ஆதரித்துள்ளனர். மக்களின் ஜன நாயக தீர்ப்பு அரசியல் ரீதியாக ௭ம்மை முத ன்மைப்படுத்தி யுள்ளது. இதனை நாம் முறை யாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஜன நாயகத் தீர்ப்பை அரசாங்கமும் ஏற்று க்கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண் டும். தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மக் களின் ஆணையை மதித்து செயற்பட வேண் டும். மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றி ணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடை த்துப் பலவீனப்படுத்தியுள்ளது.

ஆனா ல் ௭ம்மை உடைக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் பியசேனவை மட்டும் அரசாங்க த்தால் பிரித்தெடுக்க முடிந்தது.கிழக்கு மாகாண உறுப்பினர்களாக தெரிவுசெய்ய ப்பட் டுள்ள நீங்களும் தொடர்ந்தும் கொள் கையுடன் மக்களின் ஆணையை மதித்து செயற்பட வேண்டும். சில வேற்றுமைகள் ௭ம் மி டத்தில் இருக்கலாம். அவை ஒப் பீட்டளவில் பெரிய விடயங்களல்ல. ஆகவே ௭மது மக்களின் நீண்டகால அபிலா ஷைகளை மதித்து நீங்கள் செயற்பட வேண் டும்.

No comments:

Post a Comment