Translate

Tuesday 25 September 2012

கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் தெரியாது : பிள்ளையான்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், மகிந்தா தனக்கு ஆலோசகர் பதவி ஒன்றை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட முடியும் எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இனவாதத்தை முன்வைத்து போட்டியிட்டதாகவும் எனினும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால், மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலில் தமிழ் மக்கள் குறைவாக வாக்களித்துள்ளனர் புலம்பெயர் தமிழர்களே நாட்டை குழப்புகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே வேளை கிழக்கு மாகாண மக்கள் அரசியல் புரியாதவர்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.
பிள்ளையானின் குண்டர்படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. பிள்ளையானின் சமூக விரோதச் செயற்பாடுகளை மறைத்த புலம் பெயர் அரச சார்பு தமிழ் இணையங்கள் அவரின் பிரதேச வெறியைத் தூண்டும் உரையைப் ‘பெருமையோடு’ பிரசுரித்தன.

No comments:

Post a Comment