Translate

Friday, 28 September 2012

இலங்கை நிலைமை குறித்து உலகத் தமிழர் பேரவை தென் ஆபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை


இலங்கை நிலைமைகள் குறித்து உலகத் தமிழர் பேரவை தென் ஆபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.அவ் அமைப்பின் சார்பில் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவெல் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென் ஆபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.


சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறப்பிடப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகளின் மூலம் மட்டுமே குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டும் வரையில் உலகத் தமிழர் பேரவை அமைப்பு தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடன் இந்த விடயம் குறித்து வலியுறுத்தி வரும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment