Translate

Friday, 27 May 2011

முதல் முறையாக ஐரோப்பியப் பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்

முதல்முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் !

யூன் 1ம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம் மாநாட்டில் போல் மேர்ஃபி (ஐரோ.நா.ம.உ) உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளுகின்றனர்.


குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனாரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. 



இம் மாநாட்டில் போருக்குப் பின்னர் எவை நடைபெற்றிருக்கவேண்டும் எனவும், நடைபெறாமல் இருக்கும் விடயங்கள் எது எனவும் அலசி ஆராயப்படவுள்ளது. தமிழ்  சொலிடாரிட்டி இயக்கம் பல அமைப்புக்களுடன் இணைந்து இதனை ஒழுங்குசெய்துள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்களில் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார், இலங்கை சட்டத்தரனிகள் சங்கப் பிரதிநிதிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு ஐ.நா வின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள சில மனித உரிமைக் கழக ஆய்வாளர்கள், அரசார்பற்ற நிறுவனக்களின் பணிப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்திஜீவிகளும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

பிரித்தானியத் தமிழர்கள் முதல் முறையாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கூடி நடத்தும் தீர்மான மாநாடு இதுவாகும். பிரித்தானியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை இணைத்து தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுபினர்கள் என்ற அமைப்பு இருப்பதுபோல, ஐரோப்பிய நாடாளுமன்றிலும் தமிழர்களுக்காக ஒரு அனைத்துக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்ற உறுபினர்கள் அமைப்பு என்று ஒன்றை உருவாக்க முனைப்புக்காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment