Translate

Thursday 26 May 2011

தெற்கில் நடப்பது யுத்த கொண்டாட்டம் அல்ல கொடூரத்தின் குதூகலிப்பு


சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட, மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையென்று அது கூறிக் கொள்ளும்வன்னியில் நடந்த தமிழினப் படுகொலை யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை எத்தனை வருடங்கள்தான் சென்றாலும் அந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்கள் பட்ட துன்ப, துயரங்கள், இழந்த உறவுகள், இழக்கப்பட்ட அவயங்கள் இவையனைத்தும் மாறாத வடுக்களாகவும் ஆறாத துயரங்களுமாகவே தொடருகின்றன. வன்னி நிலப்பரப்புக் கூட இன்று மயான பூமியாகவே காட்சியளிக்கிறது. சில இடங்கள் இன்றும் ஜப்பானிய ஹிரோஷிமா நகரத்தையே நமக்கு ஞாகப்படுத்தும். யுத்தத்தின் மூர்க்கம் அங்கு பல அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளது.
.
இந்த இரு வருட காலத்தில் வன்னித் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களால் செய்ய முடிந்தவை தம்மிடமிருந்து அதறப் பதறப் பறிக்கப்பட்ட உறவுகளின்; ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் மட்டுமே. அதனைக்கூட நிம்மதியாக சுதந்திரமாக வெளிப்படையாக அவர்கள் செய்ய விட்டுவைக்கவில்லை சிங்கள அரசு.
.
தெற்கில் தொடரும் குதூகலக் கொண்டாட்டங்கள்
.
ஆனால், தெற்கிலோ வேறு, நிலை. வன்னி யுத்த வெற்றி என்பது சிறிலங்கா அரசுக்கு நாடு பிடித்தது போல்தான். கடந்த இரு வருடங்களாகக் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவே இல்லை. பல நாடுகளின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டு இரத்த கறை படிந்த, போர்விதிகளுக்கும் , மனித குலத்திற்கும் அப்பாற்பட்ட வெல்லப்பட்ட இந்த யுத்தத்தை சிறிலங்கா அரசு தானே தனித்து நின்று தொடுத்து வெற்றி கொண்டதாக வேறு நினைப்பு.
SLA62
.
சொற்களில் ஒரு நாட்டு மக்கள் செயற்பாட்டிலோ அடிமைகள்
.
இது ஒரு புறமிருக்க, “நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள் எங்களிடம் ஜாதி, மத பேதங்கள் இல்லை,;” என்ற வார்த்தைகளை தமிழில் அடிக்கடி உச்சரித்துக் கொள்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அனைவரையும் ஒரு தாயின் பிள்ளைகளாகத் தாம் கருதுவதாகவும் கூறுபவர்   இன ரீதியாக முற்று முழுதாக ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, நொந்து நொறுங்கிய நிலையில் ஓர் இனம் கிடக்க தெற்கில் வெற்றிக் கொண்டாட்டங்கள் என்பது ஏன்? இதுதான் அனைத்து மக்கள் மீதான சமத்துவப் பார்வையா? எங்கே அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற தத்துவம்? பௌத்த போதனையும் இப்படியா கூறுகிறது? நாளாந்தம் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் நிராயுத பாணிகளான மக்களை எப்படி வதைக்கின்றார்கள் என்பதனை உலகிற்கே தெரியும்.
.
முழுப் பூசினிக் காயை சோற்றில் மறைக்க முயற்சி
.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  அழிக்கப்பட்டமைக்காகவே இந்தக் கொண்டாட்டம் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசு திரும்பத் திரும்பக் கூறிக் கொள்வதனை நோக்கும் போது அப்பாவித் தமிழ் மக்களின் அழிவை மறைக்கும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டது என்பதனை சிறிலங்கா அரசு மறைக்க முயற்சிப்பதானது நிச்சயம் முழுப் பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் சிங்கள அரசின் வழமையான செயற்பாடாகும்.
.
யுத்தக் கொண்டாட்டமல்ல.. கொடூரக் குதூகலிப்பு
.
அப்பாவிப் பொதுமக்களைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மக்களோடு மக்களாகச் சாதாரண உடையில் நின்று கொண்டு யுத்தம் புரிகிறார்கள் என்றெல்லாம் வன்னி இறுதிப் போரில் சிறிலங்கா அரசு கூறியனவற்றை இன்று அரசுக்கு எதிரான ஒரு குற்றப்பத்திரமாகவே முன்வைக்க முடியும்.
மெனிக் வலயம் 2
.
முன்னர் கூறியவாறுதான் புலிகள் செயற்பட்டார்கள் என்றால் பொதுமக்கள் எவ்வாறு சிறிலங்கா படை தரப்பினரால் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்? மக்களை மனிதக் கேடயங்களாக வைத்து மக்களோடு மக்களாக அவர்கள் நின்று யுத்தம் புரிந்திருப்பார்களானால் ஒவ்வொரு இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியிலிருந்தும் வெளிப்பட்ட தோட்டாக்கள் மக்களை விலக்கிப் புலிகளை மட்டும் சுட்டிருக்குமா? விமானத்திலிருந்தும் பீரங்கிகளிலிருந்தும் பொழியப்பட்ட குண்டுகள் மக்களை மனிதாபிமானத்தோடு விலக்கி புலிகளை மட்டும் குறி வைத்திருக்குமா?  ஆகவே இந்த யுத்த வெற்றியானது கொண்டாட்டம் அல்ல.. கொடூரமே.. அப்பாவி மக்களை வேட்டையாடிய வெறியில்,மமதையில் குதூகலிக்கும் மிருகங்களின் கொண்டாட்டம்.
.
இந்த வெற்றிக் கொணடாட்டங்கள் எதற்காக? யாருக்காக? என்பது அடுத்த கேள்வி. இதனால் கிட்டப் போகும் பயன் என்ன? சர்வதேசத்துக்குத் தன்னைச் சண்டியனாகக் காட்டிக் கொள்ளவும் மறுபுறத்தில் உள்ளுரில் தங்களது அரசியல் முகவரியை அல்லது இருப்பை சரிபார்த்துத் தக்க வைக்கவுமே இந்தக் கொண்டாட்டங்கள் உதவுமென அரசு நினைத்தால் அதுவும் தப்புக் கணக்கே.
.
அல்லது கடந்த காலத் துன்பியல்களை இவ்வாறான கொண்டாட்டங்கள் மூலம் ஞாபகப்படுத்தி தமிழர்கள் அந்தக் கொடூரங்களை எண்ணி, எண்ணி ஏங்கி அழுது சாக வேண்டும் என்பதற்காகவா இந்தக் கொண்டாட்டங்கள்?
.
வன்னி மக்களின் வறுமையை விற்றுப் பிழைக்கும் அரசு
.
யுத்தக் கொண்டாட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் இன்று கோடிக் கணக்கில் கொட்டப்படுகிறது. இதுதவிர, போர் பற்றிய கருத்தரங்கின் செலவுக்காக 45 மில்லியன் டொலர்கள் விரையமாக்கப்படுகிறது. யுத்தத்திற்கு செலவழித்த பணத்திர்கு சமனாக யுத்த குற்ற சாட்டை மறைக்கும் சிங்கல அரசின் கொண்டாட்டங்களும், கருத்தரங்குகளும் இரண்டு வருடமல்ல பலவருடங்களாக செய்யவேண்டி வரும். இதற்கு போரின் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் என சர்வதேசத்தையும் உள்ளூர் மக்களையும் ஏமாற்றி பிழைக்கும் வேலையில் தான் சிங்களம் இன்று ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
.
 குடி நீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்
ஆனால் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்த நிலையிலும் தப்பிப் பிழைத்து வாழும் வன்னித் தமிழர்களின் பரிதாபத்துக்கு இன்னும் இரங்காத நிலையிலே சிறிலங்கா அரசு உள்ளது.  பொறுப்புமிக்க ஒர்; அரசாங்கம் அந்த மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை வெட்கக் கேடானது.
.
வெற்று வாக்குறுதிகளை வழங்கி மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்ட மக்களின் பரிதாப நிலை ஒரு பக்கம்.. கண்ணி வெடி..கண்ணி வெடி என்று கூறிக் கொண்டே காலத்தைக் கடத்தியபடி பல்லாயிரக்கணக்கான தமிழர்கனை இன்னும் முகாம்களில் சிறைப்படுத்தி வைத்திருப்பது மறுபுறம். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் அந்த மக்களுக்கு அரசு என்ன செய்தது? அண்மையில் யாழ். குடாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியொன்றுக்குச் சென்றிருந்த ஈராக் நாட்டின் தூதுவர் அந்த மக்களின் பரிதாப நிலை கண்டு தன்னிடமிருந்த பணத்தைப் பங்கு போட்டுக் கொடுத்ததனை யாரும் அறியாமல் இல்லை. இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம். குடியேற்றப்பட்ட யாழ் குடா மக்களுக்கே இந்த நிலை என்றால் வன்னி மக்களின் பரிதாபம் கூறிச் சொல்லும் அளவன்று.
.
சிறிலங்கா அரசு நினைத்திருந்தால் கொண்டாட்டங்களுக்குக் கோடிக் கணக்கில் கொட்டப்படும் இந்தப் பணத்தைக் கொண்டே அந்த மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும்; செய்திருக்க முடியும். ஆனால் அதனைச் செய்யமாட்டாது. ஏனெனில் அந்த மக்களின் துன்பங்கள், கஷ்டங்களைச் சர்வதேசத்திடம் விற்றுத்தானே பிழைக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் தெளிவுடன் உள்ளது என்பது மட்டும் நிச்சயம்

No comments:

Post a Comment