Translate

Thursday 26 May 2011

வன்னியில் பாரிய படைத்தளம் – மாவீரர் துயிலுமில்லம் அழிப்பு


வடபகுதியில் மிகப்பெரும் படைத்தளங்களை அமைத்துவரும் சிறீலங்கா படையினர் அங்குள்ள மக்களின் குடியிருப்புக்களையும், மாவீரர் மயானங்களையும் அழித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் உள்ள ஈச்சங்குளம் பகுதியில் பாரிய படைத்தளம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

800 இற்கு மேற்பட்ட மாவீரர்கள் புதைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் படைத்தளத்தை அமைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் இந்த திட்டமிட்ட செயலுக்கு எதிராக வன்னி மக்கள் தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் மண்டைதீவு பகுதியிலும் 40 ஏக்கர் நிலத்தில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய தளம் ஒன்றை அமைத்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment