Translate

Friday, 9 December 2011

என்னவென்பது இந்த நிலைகெட்ட மாந்தரை?

இந்தியக் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றது. நாம் மெய்சிலிர்க்க வேண்டிய செயலை நம் கடலோரக் காவல்படை செய்திருக்கிறது. இதையே அடுத்த நாட்டு காவல் படை செய்திருந்தால் நாம் அவர்களை பிடித்து உச்சியே முகர்ந்திருக்கலாம். ஏனென்றால் தமிழக மீனவர்கள் மீது அடுத்த நாட்டு காவல் படை வழக்கு போடுவதுதானெ முறையும் நியாயமும். ஆனால் நடந்திருப்பது என்ன? தன் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி சென்றார்கள் என்று, தன் நாட்டு மீனவர்கள் மீதே பொய் புகார் கொடுக்கும் ஒரே நாடு இந்தியா.


நாம் மெய்சிலிர்க்க வேண்டும். தமிழன், தமிழன், என்று கூப்பாடு போடும் அடையாலம் இல்லாதவர்களே இதைவிட இந்தியத் திரு நாடு நமக்கு என்ன நன்மை செய்யமுடியும்? "என்னய சுடுறான், அடிக்கறான்னு", இந்தியாவோட ஒற்றுமைய கெடுக்காதீங்க.

அடையாலம் இல்லாதவர்களின் கேள்வி: உன் வீட்டுல இந்த மாதரி ஒரு கெட்டது நடந்தா நீ பொத்திக்கிட்டு இருப்பியா? பொத்திக்கிட்டுத்தான் இருக்கனும்னா அது எந்த ஊரு நியாயம்......மனு நியாயமா? எவன் உயிரு போனாலும் அது உயிரு. அதுக்கு விலை கிடையாதுன்னு கொதிக்கறதுதானே நியாயம்....இல்ல இந்திய தேசியமனு வியாக்கியானம் பேசுறது நியாயமா?

No comments:

Post a Comment