தாம் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, இன்னும் தமக்கு தெளிவுப் படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை கைவிடுமாறு கோரி இருந்தார். தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் தனிமனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறித்த மூன்று கோரிக்கைகளும், பாதுகாப்பை காரணம் கொண்டு, அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பத்தை பெற்றுத் தருமாறு அவர் கோரியுள்ளார். இது தொடர்பாக கெகலிய வழங்கும் தகவல்களை கேட்க கீழே உள்ள குறியீட்டை அழுத்தவும்...
முதற்கட்டமாக அரசாங்கம் கூறுகின்ற விடயங்களில் தீர்வுக் கண்டதன் பின்னர், படிப்படியாக ஏனைய விடயங்களுக்கு செல்லலாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், எமது செய்திப்பிரிவுக்கு இந்த கருத்தை வெளியிட்டார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பேணும் அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் நியாயமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுரேச் பிரேமச்சந்திரன் வழங்கும் வழங்கும் தகவல்களை கேட்க கீழே உள்ள குறியீட்டை அழுத்தவும்..
No comments:
Post a Comment