மிக அரிதாக மட்டுமே காணக்கிடைக்கவல்ல இக்கிணற்றின் சிறப்பம்சம், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற இதன் ஆழம்தான் ..!
புத்துரில் இருந்து சுன்னாகம் செல்லும் வழியில் சென்றால் .. ராசவீதிச்சந்தியில் ஒன்றும் தெரியாத சாதுவாக நம்மை பார்க்கிறது இந்தக்கிணறு. நெருங்கிச்சென்று நாமும் பார்த்தால், தலையைச்சுற்றும் அளவுக்கு மர்மத்தை தனக்குள் வைத்திருக்கிறது ..
அதன் மௌனம் ஏதோ சவால் போலவும் இடிப்பதால், சரி இறங்கித்தான் பார்ப்போமே என்று ஆழத்தைக்கண்டு பிடிக்கும் முயற்சியில் பல பேர் முயன்று பார்த்துவிட்டனர் — வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் உட்பட. கிணறும் தாராளமாக அவர்களை உள்வாங்கி, கடைசியில் வெறும் கையுடன் வெளியே அனுப்பியது.
20 அடி நீள அகலம் கொண்டு தன்னை சாதாரணமாக காட்டியபடி அப்பிரதேசத்தின் அத்தனை பகுதிகளுக்கும் நீரை ‘சப்ளை’ செய்துவிடுகிறது. உப்பு நீர்ப்பாங்கை கொண்ட இந்த மண் பகுதியில் நிலாவரைக்கிணற்றின் நன்னீர் தொண்டு வரப்பிரசாதமாய் போற்றப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றைப்போல் இந்த நிலாவரைக்கிணறும் புலப்படாத ஆழத்தையும், வரலாற்றையும் கொண்டு, நம்மை திகைக்க வைக்கிறது..!
எத்தனை காலத்திற்கு தனது நிலவறையைக் காட்ட மறுக்கப்போகிறாரோ, இந்த நிலாவரைச்சாதனையாளி …http://nenjame.com/?p=579
No comments:
Post a Comment