Translate

Friday, 9 December 2011

ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த இலங்கையருக்கு மீண்டும் பிரிட்டனில் வாழ நீதிமன்று அனுமதி


பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்குச் சென்றுள்ள இலங்கைக் குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் பிரித்தானியாவில் குடியேறி வாழ்வதற்கான உரிமை உண்டு என பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு லண்டனில் வசித்து வந்த இக்குடும்பம் சட்டத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தது.

இவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இக்குடும்பத்திற்கு 37 ஆயிரம் பவுண்ஸ் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டு செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை எதிர்வரும் 28 நாட்களுக்குள் 

செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. நீதிபதி Justice Cranston இன் தீர்ப்பின்படி குறித்த இலங்கை குடும்பத்தின் தலைவரான கணவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவரின் மனைவி 14 மற்றும் 23 வயதுகளை கொண்ட அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் பிரித்தானியாவுக்கு திரும்ப உரித்துடையவர்களாவர்.

இந்தக் குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் பிரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகளினால் இக்குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment